மகனின் ஆசையை நிறைவேற்றும் சமுத்திரக்கனி... ‘விமானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 
சமுத்திரகனி விமானம்

கதையைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சமுத்திக்கனி இப்போதும் முன்னணியில் இருக்கிறார். தான் நடிக்கும் படத்தில், கதாபாத்திரத்திற்கேற்ப பாந்தமாய் பொருந்துகிறார். இயக்குநர் சமுத்திரகனியை விட, நடிகர் சமுத்திரக்கனிக்கு தமிழ் ரசிகர்களைத் தாண்டி மலையாள, தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்கள் வட்டாரம் பெருசு. இந்நிலையில், இன்று வெளியாகி இருக்கும் சமுத்திரகனியின் ‘விமானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

கடந்த 2003ல் வெளியான ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சமுத்திக்கனி, அதன் பின்னர் நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்களை இயக்கியுள்ளார். நாடோடிகள் படத்தின் மூலமாக பரவலாக ரசிகர்களைத் திரும்பி பார்க்க வைத்தவர். 

Vimaanam

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சிவபிரசாத் யானலா இயக்கியுள்ளார். இப்படத்தில் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், மொட்டை ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசை அமைத்திருக்கிறார். 

இந்நிலையில், விமானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழு நேற்று (ஏப்.14) வெளியிட்டது. விமானத்தில் பறக்க விரும்பும் மகனின் ஆசையை, மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் தந்தை எவ்வாறு கையாண்டார்? மகனின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது தான் கதை என்று தெரிகிறது. 

இப்படம் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், உணர்வுப் பூர்வமாகவும், பார்வையாளர்களுக்கு விமான பயணத்தை அளிக்கும் வகையிலும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web