சஞ்சார் சாதி செயலி ரத்து... எதிர்ப்பு சூழலில் மத்திய அரசு வாபஸ்!

 
சஞ்சார் சாதி
 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற மத்திய தொலைத்தொடர்பு துறையின் உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டது. நவம்பர் 28 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, தனியுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்ததைத் தொடர்ந்து ரத்தானது. ஆப் பயன்படுத்துதல் அதிகரித்துள்ளதால் கட்டாயம் தேவையில்லை என டெலிகாம் துறை விளக்கம் வழங்கியுள்ளது.

சிம் மோசடி தடுப்பு, மொபைல் திருட்டு கண்காணிப்பு, பயனரின் பெயரில் இருக்கும் செல்லுபடியாகும் சிம் விவரங்கள் போன்ற வசதிகளை வழங்கும் சஞ்சார் சாத்தி ஆப்பை இந்த ஆண்டு ஜனவரியில் அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த நாளில் மட்டும் 6 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்ததாகவும், மொத்தப் பதிவு எண்ணிக்கை 1.4 கோடியை எட்டியுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஆப்பை டிஸேபிள் செய்ய கூடாது, அனைத்து புதிய மற்றும் பழைய போன்களிலும் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனை கடுமையான சர்ச்சை ஏற்படுத்தியது.

சஞ்சார் சாதி

ஆப்பிள், சாம்சங், சியோமி உள்ளிட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பின. அதேசமயம் காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் “இது ஒரு உளவு கருவி” என கடும் விமர்சனம் செய்தன. டிஜிட்டல் உரிமைகள் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரத் தயாரான நிலையில், அரசு இன்று உத்தரவை ரத்து செய்தது. விமர்சகர்கள், “பிரச்சார தோல்வியை மக்கள் எதிர்ப்பு வெளிப்படுத்தியது” என கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!