பிக் பாஸ் 9ல் கலகம் நாற்காலி தகராறில் சான்ட்ரா–சுபிக்‌ஷா மோதல் !

 
பிக்பாஸ் 9
 

பிக் பாஸ் சீசன் 9 இன்றைய டாஸ்க் சூடுபிடித்து வரும் நிலையில், சுபிக்‌ஷா அமர்ந்த நாற்காலியை காலி செய்ய சான்ட்ரா நேரடியாக அவர்மீது அமர்ந்து இடையூறு செய்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சான்ட்ராவின் இந்த செயல் தாக்குதல் முயற்சி என சிலர் குற்றம் சாட்ட, “சுபிக்‌ஷா ஏன் எதிரணியின் நாற்காலியில் அமர வேண்டும்?” என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

பிக்பாஸ் 9

நடனக் கலைஞர் ரம்யா கேப்டனாக இருக்கும் இந்த வாரம், “ஜமீன்தாரும் நெக்லஸும்” என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ரெட்ரோ மற்றும் மாடர்ன் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள போட்டியாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பிரபல திரைப்படக் கதாபாத்திரங்களில் நடித்து நெக்லஸை பாதுகாப்பதே இவர்களின் நோக்கம். இதில் திருவிளையாடலில் நாகேஷின் ‘தருமி’யாக சுபிக்‌ஷா, மதராசப்பட்டினம் படத்தின் எமி ஜாக்சனாக சான்ட்ரா வேடமேற்றுள்ளனர்.

இந்த டாஸ்கில் மேடையின் அருகில் பலரும் படுத்து நெக்லஸை காக்கும் சூழலில், சுபிக்‌ஷா மாடர்ன் அணியின் நாற்காலியில் அமர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தினார். அவரை எழுப்ப முடியாததால், சான்ட்ரா நேரடியாக அவர்மீது அமர்ந்து தள்ள முயற்சித்தார். இந்த காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி, இரு தரப்பினரிடமும் கடுமையான விமர்சனத்தையும் ஆதரவையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!