சென்னையில் இன்று தொடங்கும் 'சங்கமம் 2026'! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 
சென்னை சங்கமம் பொங்கல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கும் வகையில் நடத்தப்படும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' ஐந்தாவது ஆண்டாக இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த விழா, சென்னையை ஒரு கலைக் கூடமாக மாற்ற உள்ளது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சங்கமம் 2026-ஐத் தொடங்கி வைக்கிறார்.

இன்றைய தொடக்க விழாவில் மட்டும் தமிழகத்தின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து வழங்கும் பிரம்மாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நாளை முதல் நான்கு நாட்களுக்குச் சென்னையின் 20 முக்கிய இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கனிமொழி சென்னை சங்கமம்

மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கத்திபாரா சந்திப்பு, தி.நகர் நடேசன் பூங்கா உள்ளிட்ட 20 இடங்களில் இக்கலை விழா நடைபெறுகிறது. கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, மல்லர் கம்பம் என 50-க்கும் மேற்பட்ட பாரம்பரியக் கலைகள் அரங்கேற உள்ளன. தமிழகம் முழுவதிலும் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு ஒரு புதிய முயற்சியாக, கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) நிறுவனத்துடன் இணைந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கும் 'அலங்கார ஆடை அணிவகுப்பு' நடைபெறுகிறது. இது வரும் ஜனவரி 17-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறவுள்ளது. கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளான மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா முதல் செட்டிநாடு மற்றும் கொங்கு நாட்டு உணவுகள் வரை சுவைக்க 'உணவுத் திருவிழாவும்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!