சானியாவின் சதிராட்டம்...! ராஜஸ்தான் காவல் துறையை திணற வைத்த திருச்சி போலீசார்!

                                                                                                                     - ‘ப்ரீத்தி’ கார்த்திக்

 
சத்தியபிரியா

திருச்சி மாநகரில் செஷன்ஸ் கோர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு. நவம்பர் மாதம் ஒரே நாள் இரவில், 3 பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர். திருச்சி, உறையூர் பகுதிகளிலும், வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த சங்கர், ரத்தன் ஆகிய இருவரை, தெற்கு துணைக் கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மோகன், சியாமளா, சப்இன்ஸ்பெக்டர் உமாசங்கரி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டது.

கொள்ளையடித்த 250 பவுன் நகைகளை ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் பதுங்கி இருந்த பன்னாலால்- சானியா தம்பதியரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கைதான இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து, திருச்சி கண்டோன்மென்ட்  உதவி ஆணையர் கென்னடி தலைமையில், உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ., உமாசங்கரி மற்றும் 10 போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார், மார்ச் 2ம் தேதி டெம்போ டிராவலர் வாகனத்தில் அஜ்மீர் புறப்பட்டுச்சென்றனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார், பன்னாலால் சானியா தம்பதியை கைது செய்ய முயன்றனர். அப்பொழுது பன்னாலால் தப்பியோட, அவரது மனைவி சானியா மட்டும்  போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் சங்கர், ரத்தன் கொடுத்த திருட்டு நகைகள் குறித்து தனிப்படை போலீசார் கேட்டுள்ளனர். நகைகளை உருக்கி விற்று விட்டதாக போலீசாரிடம் சானியா கூறியுள்ளார். அதற்கு பதிலாக, பணமாக தருகிறோம் என்று கூறி உள்ளார். இதை நம்பிய போலீசார், பணம் தருவார் என்று நம்பி காத்திருந்தனர்.

திருச்சி கென்னடி

சானியாவோ சாதுரியமாக தன்னை கைது செய்யாமல் இருக்க, தமிழக போலீசார் ரூபாய் 25 லட்சம் லஞ்சம் கேட்பதாக அஜ்மீர் நகர் பினாய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார், தமிழக போலீஸ் தனிப்படையினர் 12 பேரையும் பிடித்து விசாரித்தனர். 24 மணி நேரம் வரை தனிப்படை போலீசார், ராஜஸ்தான் 'மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் இருந்ததால் அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி போலீசாருக்கு தலைவலி எடுக்க ஆரம்பித்தது.

தகவலறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ராஜஸ்தான் மாநில டிஜிபியை தொடர்பு கொண்டு உண்மையை விளக்கியுள்ளார். பன்னாலால் மற்றும் சானியா ஆகியோருக்கு திருச்சியில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களையும், சங்கர், ரத்தன் இருவர் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றையும் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தமிழக போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து தமிழக தனிப்படை போலீசாரை, ராஜஸ்தான்  போலீசார் விடுவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரத்தன், சங்கர் கும்பல் ரயில் நிலையங்களில் தங்கி பெட்ஷீட் விற்பது போல தெருக்களில் வலம் வந்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் 23ம் தேதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவுடன் கஸ்டடி பெற்று 27ம் தேதி ரத்தன், சங்கரை அழைத்துக் கொண்டு தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். குற்றவாளிகளிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், ரூ2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டு கும்பலில் முக்கிய தலைவியான சானியாவை ராஜஸ்தான் போலீசார் உதவியுடன் பிடித்து திருச்சி போலீசார் விசாரித்தனர் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா நிருபர்களிடம் தெரிவித்தார்.

சத்தியபிரியா கென்னடி

இது குறித்து நேற்று மாநகர காவல் ஆணையர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது, திருச்சியில் திருடிய 100 பவுன் நகைகளை திரும்ப தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதற்கிடையே நகைகளுக்கு பதிலாக ரூ.25 லட்சம் ரொக்கம் தருவதாக சானியாவின் சகோதரர் லட்சுமணன் நமது போலீசாரிடம் கூறியுள்ளார். இதை நம்பி தனிப்படை போலீசார், பணத்தை வாங்கச் சென்றனர். அப்போது லட்சுமணன், ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், தமிழக போலீசார் மிரட்டி பணம் கேட்பதாக பொய்யான புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லட்சுமணன் பணத்தை கொடுக்கும் போது அதை பெற்ற நமது போலீசாரை, ராஜஸ்தான் போலீசார் பிடித்துள்ளனர். பிறகு உரிய ஆவணங்களைக் காட்டி நடந்த விபரம் குறித்து விளக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உதவி ஆணையர் கென்னடி, விமானத்தில் இரு கொள்ளைக்காரர்களையும் அழைத்துக் கொண்டு வர, பின்னர் நேற்று மதியம் 3 மணிக்கு தனிப்படை போலீசார் விடுவிக்கப்பட்டனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 2 குற்றவாளிகளும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web