நாயை இரும்பு கம்பியால் தாக்கிய தூய்மை பணியாளர் பணியிடநீக்கம்!
Feb 17, 2025, 18:15 IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காமராஜ் என்பவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம் போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாயை பார்த்த காமராஜ் இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்தியுள்ளார். அப்போது அந்த நாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தது.
இது குறித்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது, மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மன்னச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் காமராஜரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web