தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய காலை உணவு குப்பையில் வீச்சு!

 
நெல்லை
 

தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து, நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக இலவச காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மண்டலங்களில் பணிபுரியும் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.

ஆனால் திட்டம் தொடங்கிய சில நாட்கள் மட்டுமே உணவின் தரம் நன்றாக இருந்ததாகவும், அதன் பின்னர் உணவு சாப்பிட முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகவும் பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். பல நாள்களாக தரமற்ற உணவு வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்று தச்சநல்லூர் மண்டலத்தில் வழங்கப்பட்ட காலை உணவில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் உணவை சாப்பிட மறுத்து அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசினர். தொடர்ந்து தரமற்ற உணவு வழங்கப்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!