சஞ்சு சாம்சன் குறித்து சர்ச்சை பதிவு... இந்தியாவில் இனவெறிக்கு இடமில்லை... கேரள காங்கிரஸ் கடும் கண்டனம்!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா முன்னேற இந்த ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆனால் வெற்றிக்குப் பிறகு சமூக வலைதளத்தில் வெளியான ஒரு பதிவு சர்ச்சையை கிளப்பியது. X தளத்தில் வெளியான பதிவில் பயன்படுத்தப்பட்ட வாசகம் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
.
This kind of vile racism has absolutely no place in India.
— Congress Kerala (@INCKerala) March 2, 2026
We urge @AshwiniVaishnaw to take immediate action against the person behind the account who posted this disgusting comment targeting Sanju Samson, the pride of Kerala. pic.twitter.com/uVlVr1PNbN
கேரளா பிரதா காங்கிரஸ் கமிட்டி இந்த மாதிரியான மோசமான இனவெறிக்கு இந்தியாவில் இடமில்லை. கேரளாவின் பெருமையான சஞ்சு சாம்சன் மீது அருவருப்பான கருத்து பதிவிட்ட கணக்கின் பின்னணியில் உள்ள நபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று X தளத்தில் பதிவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தலையீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிடம் தோல்விக்குப் பிறகு சூப்பர் 8 போட்டியில் தொடக்க வீரராக மீண்டும் களமிறங்கிய சாம்சன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். கொல்கத்தாவின் Eden Gardens மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து 196 ரன்கள் இலக்கை இந்தியா எட்ட உதவினார்.வெற்றிக்குப் பிறகு பேசிய சாம்சன், “என் மீது நம்பிக்கை வைத்து, தொலைபேசியை அணைத்து சமூக ஊடகங்களிலிருந்து விலகி என் உள்ளுணர்வை கேட்டேன். அழுத்தமான போட்டியில் ஆட்டத்தை முடிக்க முடிந்தது மிகவும் சிறப்பு,” என்றார். கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
