தூள் பறக்கும் சங்கராந்தி விருந்து... மருமகனுக்கு மட்டன், சிக்கன் என 470 வெரைட்டிகளில் பரிமாறிய மாமியார்!

இன்று தமிழர்கள் தைத் திருநாளைக் கொண்டாடி வரும் நிலையில், தெலுங்கு மக்கள் சங்கராந்தி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். நம்மூரில் தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டு விருந்து விசேஷமாக தடபுடலாக பரிமாறப்படுவதைப் போலவே ஆந்திராவில் திருமணமான முதல் வருட சங்கராந்தி விழாவில் புதுமாப்பிள்ளைக்கு மாமியார் பரிமாறும் சங்கராந்தி விருந்து விசேஷமானது. அப்படி ஆந்திராவில் ஏனாம் மாவட்டத்தில் மாப்பிள்ளைக்கு பரிமாறப்பட்ட சங்கராந்தி விருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓடுறது, பறக்குறது, நீந்துறது என்று மட்டன், சிக்கன் வெரைட்டிகளுடன் 470 விதமான உணவு வகைகளை தன்னுடைய மாப்பிள்ளைக்கு பரிமாறி அசத்தியிருக்கிறார் இந்த அன்பான மாமியார்.
ஏனாம் பகுதியில் வர்த்தக சங்க செயல் தலைவராக இருந்து வரும் சத்யபாஸ்கர் வெங்டேஸ்வர் மகள் ஹரின்யாவுக்கும், விஜயவாடாவை சேர்ந்த ஷாகேத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், தலைப்பொங்கல் சங்கராந்தி விழாவுக்கு இந்த புதுமண தம்பதியர் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு தங்களுடைய மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் விருந்தாக 470 வகை உணவுகளைப் பரிமாறி அசத்தியுள்ளனர். இத்தனை வெரைட்டியான உணவுகளை ஒரே நேரத்தில் பார்த்த புதுமாப்பிள்ளை திகைத்து நிற்கிறார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!