வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூட்டில் சாரா உயிரிழப்பு... பைடன் நிர்வாகமே காரணம் என குற்றச்சாட்டு!

 
சாரா
 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சாரா பெக்ஸ்டிராம் (20) உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாராவுடன் கடுமையாக காயமடைந்த ஆண்ட்ரூ உல்ப் (24) உயிருக்கு போராடி வருகிறார். இந்த தாக்குதலை நடத்தியது ரகுமானுல்லா லக்கன்வால் (29) என்று திருப்திகரமான ஆதாரங்களின் பேரில் சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்கா

தற்போது அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு செயல்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் பாதுகாப்பு அம்சங்களை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தாக்குதலில் பலியான சாராவின் மரணம் குறித்து, பைடன் நிர்வாகமே முதன்மை பொறுப்பு என உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி கிறிஸ்டி நோயம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். “சாராவின் பலி பைடன் அரசின் பாதுகாப்பு தவறுகளின் விளைவு” என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா போலீஸ்

ரகுமானுல்லா, 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பிய பின்னர், ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் Operation Allies Welcome என்ற திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்கு குடியேறியவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில், இந்தத் தாக்குதல் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பை மீண்டும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!