“இது எங்களுக்கான தருணம்” – பசும்பொனில் சசிகலா பரபரப்பு பேச்சு!
பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என வி.கே.சசிகலா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கமுதி அருகே கோட்டைமேட்டில் நடந்த நலத்திட்ட உதவி விழாவில் அவர் உரையாற்றினார். “எனக்கு 39 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. இந்த தருணத்திற்காக 9 ஆண்டு காத்திருந்தேன். இது எங்களுக்கான தருணம்” என உணர்ச்சியுடன் கூறினார்.

தனது உரையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து கடுமையாக விமர்சித்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் அனைவரையும் அமர வைத்து பேசியதை நினைவுகூர்ந்த அவர், “திடீரென அம்மா சமாதியில் சென்று தர்ம உத்திரவு விட்டது யாரோ சொல்லியதால் தான்” என குறிப்பிட்டார். அம்மா காலத்தில் காவல்துறையில் கட்சியினர் தலையீடு இல்லை என்றும், அதனால் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

சசிகலாவின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஆதரவாளர்கள் இடையே இது அதிர்வலை கிளப்பியுள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு இந்த கருத்துக்கள் கட்சிக்குள் மேலும் பிளவுகளை உருவாக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
