சசிகலா புதிய கட்சி தொடக்கம் … ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்’ அறிவிப்பு!
வி.கே. சசிகலா புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அந்தக் கட்சிக்கு ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு சின்னத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் தொண்டர் ஒருவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன் இணைந்ததை நினைவுகூர்ந்தார். அதுபோல தானும் ஒரு முடிவு எடுத்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் பயணத்தை தொடங்கும் நோக்கில் இந்த கட்சி உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் இந்த கட்சி செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுடன் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சசிகலா கூறியுள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
