சிறைக்குள் எனக்கு கொரோனா பரப்ப 'அவங்களை' அனுப்பி வச்சாங்க... சசிகலா பரபரப்பு!

 
சசிகலா சசிகலா

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் இருந்தபோது, தன்னைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு கொரோனா தொற்று பரப்பப்பட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சிறையில் தனது அறைக்குள் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக அமர வைத்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்ததும் பின்னரே தனக்குத் தெரியவந்ததாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு சதித்திட்டத்தின் அடிப்படையிலேயே அந்தப் பெண் தனது அறைக்குள் அனுப்பப்பட்டதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சசிகலா

பெண்கள் சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகளில் தனக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்ட மர்மத்தை விளக்கிய அவர், தொற்று உறுதியான பிறகும் தனக்கு 15 நாட்கள் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார். "யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் என்னைச் சாகடிக்கப் பார்த்தார்கள்" என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை எகிற வைத்துள்ளது. தனது உடல்நிலை மோசமடைந்து, சுமார் 85% நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, வேறு வழியின்றித் தன்னை மருத்துவமனையில் அனுமதித்ததாக அவர் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

சசிகலா

சிறை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளால் தான் மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியதாகச் சசிகலா விவரித்துள்ள விதம் அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிய அந்த இக்கட்டான காலக்கட்டத்தில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தற்போது அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது, பெங்களூரு சிறை நிர்வாகம் குறித்த பல பழைய சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியுள்ளது. ஒரு முக்கியப் புள்ளியின் உயிருக்கே சிறைக்குள் பாதுகாப்பு இல்லையா? என்கிற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்