சென்னை திரைப்பட விழா சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது!
23-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. டிசம்பர் 11 முதல் 18 வரை நடைபெற்ற இந்த விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமலி’ படத்தில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த விழாவில் ‘பறந்து போ’, ‘டூரிஸ்ட் ஃபேமலி’, ‘அலங்கு’, ‘மெட்ராஸ் மேட்னி’, ‘வேம்பு’ உள்ளிட்ட 12 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. புதுமையான கதைகளும், சமூக கருத்துகளும் கொண்ட படங்கள் தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக சினிமாவையும், தரமான தமிழ் படங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த விழாவின் நோக்கம்.

விருதுகள் பட்டியலில் ‘பறந்து போ’ சிறந்த தமிழ்ப்படமாக தேர்வு செய்யப்பட்டது. ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்திற்காக லிஜோமோல் ஜோஷ் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசு மற்றும் இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் இந்த விழா, சினிமா ரசிகர்களிடையே மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
