சாத்தான்குளம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா சப்பர பவனி!
சாத்தான்குளம் அருகே சிதம்பராபுரம் படைமிரட்டி புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. முதல் நாளில் வள்ளியூர் சமூக நல்வாழ்வு இயக்குநர் ஜோ ரெக்ஸ் தலைமை வகித்து கொடியேற்றினார். கடக்குளம் ரியோசில் பெப்ரி மறையுரை, மன்னார்புரம் டென்சிங்ராஜா கொடி மந்திரிப்பு, சொக்கன்குடியிருப்பு ஜோசப் லியோன் நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன.
நவநாளில் ஜெபமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9ஆம் நாள் காலை குரும்பூர் பங்குத்தந்தை பபிஸ்டன் தலைமையில் ஜெபமாலை, பிரார்த்தனை, திருப்பலி, மாலையில் தூத்துக்குடி முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை, காவல்கிணறு அருங்கொடை இயக்குநர் ஜார்ஜ் ஆலிபனின் மறையுரை, இரவில் புனிதரின் அலங்கார தேர் பவனி ஆகியவை நடைபெற்றன.
இந்நிலையில் திருவிழாவின் 10ம் நாளில் ஜூப்லி திருவிழா கூட்டுத் திருப்பலி, புதுநன்மை முழுக்கு நடைபெற்றது.
மாலையில் புனிதரின் சிறப்பு தேர் பவனி, நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர், ஊர் அசனம் நடைபெற்றது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
