சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் 'தூக்கு' தண்டனை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

 
saththankulam saththankulam

 


தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில், செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் மனித உரிமை மீறலாகப் பார்க்கப்பட்ட நிலையில், சிபிஐ விறுவிறுப்பாக விசாரணையை நடத்தி 9 போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ்

நீண்ட நான்கு ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேரும் ‘கூட்டுச் சதி’ செய்து இருவரையும் திட்டமிட்டுப் படுகொலை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். "சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே அதைக் கையில் எடுத்து உயிரைப் பறித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்" எனக் குறிப்பிட்ட நீதிபதி, இது ‘அரியவகை வழக்குகளில் ஒன்று’  எனக் கூறி அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சாத்தான்குளம்

தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஜெயராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். "எங்கள் குடும்பத்தை இழந்தாலும், இனி ஒரு சாமானியனுக்கு இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்" என ஜெயராஜின் மனைவி செல்வராணி உருக்கமாகத் தெரிவித்தார். காவல்துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளால் ஒட்டுமொத்தத் துறைக்கும் ஏற்பட்ட கறையைத் துடைக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரும் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், மதுரையில் இன்று இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!