சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழு விவரம்!

 
தலைமைச் செயலகம்

தமிழகத்தில் 2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய சத்யபிரதா சாகு உட்பட 9 முக்கிய அதிகாரிகளின் இடமாற்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சத்யபிரதா சாகு: தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பழனிசாமி: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கஜலட்சுமி: நில நிர்வாகக் கமிஷனராக (Commissioner of Land Administration) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சத்ய பிரதா சாகு

கிரண் குராலா: போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு கமிஷனராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேவ் ராஜ் தேவ்: தமிழக உப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர் சஹாய் மீனா: அறிவியல் நகரம் (Science City) துறையின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மீண்டும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! ஸ்டாலினின் அடுத்த அதிரடி!

மலர்விழி: ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோபால சுந்தர ராஜ்: அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித் துறையின் தலைவர் மற்றும் இயக்குநராக நியமனம்.

பானோத் ம்ருகேந்தர் லால்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட அதே இரவில், நிர்வாக வசதிக்காக இந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!