சவுதியில் பேருந்து விபத்து: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு... அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல்!
சவுதி அரேபியாவில் இந்தியர்கள் பயணித்த பேருந்து டீசல் டேங்கர் லாரியில் மோதிய விபத்தில் 42 பேர் பலியானதை அடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மதீனாவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இருந்து உம்ரா புனிதப் பயணத்திற்காக மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்திற்குப் பிறகு, மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரியாத் தூதரகம் மற்றும் ஜெட்டா துணைத் தூதரகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஜெட்டா துணைத் தூதரகம் 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் அமைத்து, தகவல் அறிய 8002440003 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் உயிரிழந்ததால், தெலங்கானா அரசு தனி கட்டுப்பாட்டு மையம் அமைத்து ஒருங்கிணைப்பில் ஈடுபட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
