ஜாமீனில் யூடியூப் பேச்சு… சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை!

 
சவுக்கு சங்கர்

 

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் பதிவு செய்த மோசடி வழக்குகளில் கடந்த டிசம்பர் 13ம் தேதி கைது செய்யப்பட்டார். மருத்துவ காரணங்களை முன்வைத்து அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 25ம் தேதி வரை 3 மாதங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சவுக்கு சங்கர்

இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை சவுக்கு சங்கர் மீறியதாகவும், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முழு ஏற்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சவுக்கு சங்கர்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுவிட்டு தொடர்ந்து யூடியூபில் பேசலாமா என கடும் கேள்வி எழுப்பினர். காவல்துறை அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரின் தாயார் பதில் அளிக்க அறிவுறுத்தி, வழக்கை ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!