சவுக்கு சங்கர் திடீர் முடிவு... ஊடகப்பணியில் இருந்து விலகுகிறேன்... தாயின் உயிரை பணயம் வைக்க தயாரில்லை!

 
சவுக்கு சங்கர்

 
தமிழகத்தின் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் அரசியல் குறித்த பரபரப்பு செய்திகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.  மார்ச் 24ம் தேதி காலை, தனது வீட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு ஊடகப் பணியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘சவுக்கு மீடியா’ என்ற யூடியூப் சேனலில் அரசியல் விமர்சனங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த இவர், கடந்த காலங்களில் சில சர்ச்சைகள் மற்றும் வழக்குகளுக்கு உள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திலீப் சங்கர்

தூய்மைப் பணியாளர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி, சுமார் 50 பேர் கொண்ட கும்பல் சவுக்கு சங்கரின் வீட்டின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தக் குழுவினர், கதவை உடைத்து உள்ளே நுழைந்து, வீட்டில் உள்ள சமையல் பொருட்கள், அறைகள் உட்பட பல இடங்களில் சாக்கடை மற்றும் கழிவுகளை வீசி சேதப்படுத்தியதாகவும், அவரது தாயாரை மிரட்டி, வீடியோ கால் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு சவுக்கு சங்கர் ” போராட்டக்காரர்கள் மினி பஸ்ஸில் வந்திருந்தனர் என்றும், போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தபோதும், சம்பவ இடத்திற்கு இரண்டு போலீசாரே வந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் எந்த அச்சமும் இல்லாமல் தொடர்ந்து இருந்ததாகவும் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார். இது திட்டமிட்ட தாக்குதல் என்றும், கடந்த காலங்களில் தன் விமர்சனங்கள் சில அரசியல் தலைவர்கள் மீது தன்னைக் குறிவைத்து இதை நிகழ்த்த வைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.  

சவுக்கு சங்கர்

இந்த தாக்குதலுக்குப் பின்னர், தனது தாயின் பாதுகாப்பை முக்கியமாகக் கருதி, இனிமேல் ஊடகப் பணியில் தொடர விருப்பமில்லை என சவுக்கு சங்கர் உருக்கமான வீடியோ  ஒன்றை வெளியிட்டுள்ளார்.   “தாயின் உயிரை பணயம் வைத்து ஒரு ஊடகப் பயணத்தை தொடர விரும்பவில்லை” என அவர் தெரிவித்த இந்த பதிவு  சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்களையும் ஆதரவு கருத்துகளையும் கிளப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?