கவர்ச்சி, குத்தாட்டத்துக்கு நோ சொல்லுங்க... மகளிர் ஆணையம் கொந்தளிப்பு!

தெலுங்கு திரையுலகில் சமீபகாலமாக கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் அனைத்து படங்களிலும் இடம்பெறும். இந்த குத்தாட்ட பாடல்களில் முன்னணி நடிகைகளும் நடித்து வைரலாகி வருகின்றனர். குறிப்பாக புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா மாமா” என்ற பாடலுக்கு சமந்தா, ரங்கஸ்தலம் என்ற படத்தில் “ஜிகலு ராணி” என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே, புஷ்பா 2 படத்தில் “சப்புனா அரை வேண்டா” என்ற பாடலுக்கு ஆடிய ஸ்ரீ லீலா போன்ற நடிகைகள் அரைகுறை ஆடையுடன் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடி வருகின்றனர்.
இது போன்ற குத்தாட்ட பாடல்கள் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் இதற்கு இளைய தலைமுறையினர் பலரும் இது போன்ற பாடல்களில் கவனத்தை சிதற விடுவதோடு பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இது போன்ற பாடல்களால் நடிகைகள் அதிக அளவில் சம்பாதிப்பதுடன் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகமும் நல்ல வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இது போன்ற பாடல்களை எதிர்க்கும் வகையில் தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதாவது “திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அருவருப்பாக காட்டுவது சரியல்ல, தெலுங்கு திரையுலகில் இயக்குநர்கள் பட தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும், அதையும் மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது”. மேலும் இந்த எச்சரிக்கை தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!