ஆண்டுக்கு ரூ10000/- உதவித் தொகை... நாளை வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 
உதவித் தொகை

தமிழக அரசின் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2026க்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நாளை ஜனவரி 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025–26 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ளது.

உதவித் தொகை

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். உதவித்தொகை மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை வழங்கப்படும்; ஆனால் தமிழ்நாட்டிலேயே படிப்பை தொடர வேண்டும் என்பது நிபந்தனை.

கல்வி உதவி தொகை

மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். ரூ.50 தேர்வு கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கால அவகாசம் நாளை ஜனவரி 6 வரை மட்டுமே இருப்பதால், மாணவர்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!