நெஞ்சை உருக்கும் சோகம்: பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 17 மாணவர்கள் பலி!

 
பேருந்து விபத்து
 


வடக்கு கொலம்பியாவின் ஆன்டிகுவியா மாகாணத்தில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளிக் கல்விப் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சோக நிகழ்வில், 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்தபோது அந்தப் பேருந்து டோலுவா நகரில் இருந்து மெடலின் நகரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் அந்தியோக்கியாவைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தச் சுற்றுலாப் பயணம் பள்ளியின் அதிகாரப்பூர்வ ஏற்பாடு அல்ல என்றும், மாணவர்களே தங்களுக்குள் பணம் திரட்டி இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்த சுற்றுலா, 17 உயிர்களைப் பலி வாங்கியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான சரியான காரணம் குறித்து கொலம்பியா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!