ஜூலை 17ம் தேதி பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு வருடத்தின் எல்லா நாட்களுமே  உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பரிகாரத்திற்காகவும், தர்ப்பணம் செய்யவும் வருகை தருவர். ஜூலை 17ம் தேதி  திங்கட்கிழமை ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி 1ம் தேதியான அன்றைய தினம் அமாவாசை.  ஆடி அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.  

தமிழக முக்கிய ஆன்மிக தலயங்களில், இன்று தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி!

புனித ஸ்தலமான   இந்த திருக்கோயிலின் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  நடப்பாண்டு  ஆடி அமாவாசையை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். அங்கு வசித்து வரும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படலாம்.

தமிழக முக்கிய ஆன்மிக தலயங்களில், இன்று தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி!

இதன் அடிப்படையில் ஜூலை 17ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் அம்மாவட்டத்தில்ச் செயல்படும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்தகவலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன்  அறிவித்துள்ளார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்   ஜூலை 22ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web