இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... !

 
விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பரில் வட மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பல பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின. குடிநீர் மின்சாரம் இன்றி மக்கள் கடும் அவதிப்பட்டனர். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. தற்போது தான்படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது இந்நிலையில் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை   மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!
இதன் காரணமாக தென்மாவட்டங்களில்   அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின்  பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.   கடலோர மற்றும் தென் மாவட்டங்களுக்கு  இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!


 கடலூரில்  நேற்று முதலே  பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதே போல்  விழுப்புரம் மாவட்டத்திலும்  தொடர் கனமழை   காரணமாக  பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!