ராணுவ வீரரால் பள்ளி மாணவி கர்ப்பம்! போலீசார் தீவிர விசாரணை!

 
ராணுவ வீரர்

வேலுார் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் மோகன்தாஸ் (23). தற்போது, இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ பயிற்சியில் உள்ளார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது சிறுமியுடன் ஒன்றாக சேர்ந்த ஊர் சுற்றி நெருங்கி பழகியுள்ளார். 

இந்த நிலையில் ராணுவ பயிற்சிக்காக அசாம் மாநிலத்துக்கு சென்றுவிட்டார். இதனிடையே, ராணுவ வீரர் மோகன்தாஸ் காதலித்த சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மேலும் தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ராணுவ வீரர்

இதனையடுத்து நேற்று முன்தினம் சிறுமியை, அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனைகேட்டு பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். 

ராணுவ வீரர்

அப்போது ராணுவ வீரர் மோகன்தாஸ் உடனான காதல் விவகாரத்தையும், நெருங்கி பழகியதையும் கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, குடியாத்தம் மகளிர் போலீசார் ராணுவ வீரர் மோகன்தாஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web