பள்ளிமாணவி பாலியல் பலாத்காரம்... ஆசிரியரை தட்டித்தூக்கிய காவல்துறை!

 
சிவராஜ்
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா மாதனகிப்பரக்கா கிராமத்தில் வசித்து வருபவர் 14 வயது சிறுமி. இவளது பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் சிவராஜ்  கவுரவ ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் மாணவியுடன், சிவராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. 

அடிக்கடி மாணவியை தனிமையில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அவளது வீட்டுக்கு சிவராஜ் சென்றுள்ளார். அப்போது மாணவியை மிரட்டி சிவராஜ் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.  சிவராஜின் நடவடிக்கையால் பயந்துபோன மாணவி, தனது பெற்றோரிடம் இதுகுறித்து  கூறியுள்ளார்.  

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மாதனகிப்பரக்கா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அப்போது மாணவி போலீசாரிடம், சிவராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து சிவராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து  போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்ளனர். மேலும் அவரிடம் இதுகுறித்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?