மிதமான மழை ... புதுச்சேரி, காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 8.30 மணியளவில் நிலவிய இந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
