தொடரும் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயலின் விளைவாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றிய புறநகர் பகுதிகளில் நேற்று முழுவதும் இடைவெளியில்லாமல் மழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் திடீர் மழை பெய்ததால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், மக்கள் அவதிப்பட்டனர்.

புயல் நேற்று காலை தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, அதன் பின்னர் சென்னையையொட்டிய கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வாக மட்டுமே நீடித்தது. எனினும், அதன் பின்விளைவாக மழை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டுவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதுடன், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
