நாளை த.வெ.க. பொதுக்கூட்டம்... பள்ளிகளுக்கு விடுமுறை!
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் பனையூரில் உள்ள வீட்டிலிருந்து காலை 8 மணிக்கு கார் மூலம் புதுச்சேரி வருவார். காலை 10.30 மணிக்கு ஹெலிபேடு மைதானத்தில் பிரசார வேனில் நின்றபடி பொதுமக்களுக்கு உரையாற்றுவார். கூட்டம் முடிந்ததும் விஜய் மீண்டும் சென்னை திரும்புவார்.

உப்பளம் மைதானம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சீரமைக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் பாதை மற்றும் இடத்தை தகரங்களால் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பு தடுப்புகள் மற்றும் குடிநீர் வசதி பிளாஸ்டிக் தொட்டிகள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்தில் கலந்துகொள்ள 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை போலீசார் அனுமதி வழங்குவார்கள். பாஸ் வழங்கப்பட்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இதன் பின்னணியில், உப்பளம் மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
