குஷியோ குஷி ... ஜனவரியில் மட்டும் 11 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
விடுமுறை

 

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்தாலே கொண்டாட்டம் தொடங்கிவிடும். அந்த வகையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக 9 நாட்களாக இருக்கும் இந்த விடுமுறை, இந்த ஆண்டு 12 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பள்ளி

அரையாண்டு விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் முழுமையாக விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டு தொடங்கியதும் மாணவர்களை மேலும் மகிழ்ச்சியடையச் செய்யும் தகவல் வெளியாகியுள்ளது.

விடுமுறை

2026 ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 11 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், உழவர் தினம் மற்றும் ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் ஓய்வு வருகிறது. இதனைத் தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு மேலும் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் ஜனவரி மாதம் முழுவதும் மாணவ, மாணவிகள் குஷியில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!