கடும் குளிர் … 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி காணப்படும் அளவுக்கு குளிர் அதிகரித்துள்ளது. அதிகாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விமானம், ரயில் சேவைகளும் தொடர்ந்து தாமதமாகி வருகின்றன.

இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான குளிர் அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் நர்சரி முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஜனவரி 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வி அலுவலர் ராகுல் பவார் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
