நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... ராஜகோபாலசுவாமி கோவில் குடமுழுக்கு!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலகப் புகழ்பெற்ற ராஜகோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. 23 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கியதை தொடர்ந்து அரசு மற்றும் கொடையாளர்கள் நிதியாக சுமார் ரூ.16 கோடி திரட்டப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாலாலயம் நடைபெற்ற நிலையில், ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. திருப்பணிகளுக்குப் பிறகு கோவில் புதிய பொலிவுடன் பக்தர்களை வரவேற்கிறது. குடமுழுக்கு நடைபெற உள்ளதால் மன்னார்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் புதன்கிழமை ஒருநாள் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக பிப்ரவரி 7-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
