மாணவர்கள் குஷி... ஜூன் மாதம் பள்ளித்திறப்பு எப்போது?

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த தேர்வானது இன்று முதல் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த தேர்வை ஏப்ரல் 17ம் தேதியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் மீண்டும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏப்ரல் 21ம் தேதி நடைபெறவிருந்த பள்ளித் தேர்வுகள் ஏப்ரல் 17ம் தேதிக்கே மாற்றப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்
அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் ஜூன் மாதத்தில் எந்த தேதியில் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை வெயிலின் தாக்கம் ஜூலை மாதம் இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு காலதாமதமாகவே பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஜூன் 2ம் தேதி கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா.? அல்லது ஜூன் 9ம் தேதி திறக்கப்படுமா.? என்பது குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!