குண்டா இருக்க... உருவ கேலியால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகத்தில் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா பள்ளியில் +2 படித்து வருபவர் கோபிநாத்தின் மகன் 17 வயது மாணவர் கிஷோர். மாணவனின் பள்ளியில் படித்து வரும் 3 மாணவர்கள் கிஷோரை உருவ கேலி செய்துள்ளனர்.
இதனால் மிகுந்த கவலையடைந்த சிறுவன் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக விரக்தியடைந்த மாணவர் ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
குண்டாக, கருப்பாக இருக்கிறாய் என சக மாணவர்கள் கேலி செய்ததால் கிஷோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!