என்ன விட்டு போயிட்டியே ராசா... பள்ளி மாணவன் டெங்குவிற்கு பலி... கதறித் துடித்த பெற்றோர்... !

 
கோபிநாத்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ரஜினிகாந்த். இவர்  கூலித் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் கோபிநாத் 8 ம் வகுப்பு படித்து வருகிறான்.  கோபிநாத்துக்கு ஜனவரி 2 ம் தேதி முதலே காய்ச்சல் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனையடுத்து பெற்றோர்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

கோபிநாத்

3 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு  மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அங்கும்முதலுதவிக்கு பிறகு   பெங்களூரில்  உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர்.  அங்கே மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில்  இன்று அதிகாலை கோபிநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.  மாணவன் உயிரிழந்ததை தொடர்ந்து ஊராட்சி சார்பில் அப்பகுதியில் சுகாதார பணியாளர்கள் துய்மை பணிகள் மேற்கொண்டனர். பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web