பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலி... கோழியை பிடிக்க சென்ற போது பரிதாபம்!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி அதனை பராமரிக்கும் வேலையை செய்து வருபவர் கோபால். இவரது மகன் 14 வயது சந்தோஷ்குமார். இவர் குடும்பத்தினருடன் இங்கு தங்கி தோட்டத்தை பராமரித்து வருகிறார்.
இங்கு கோபாலுக்கு கை, கால்கள் செயல் இழந்த நிலையில் இருப்பதால் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். தோட்டத்தில் திறந்த வெளியில் பெரிய கிணறு உள்ள நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த சந்தோஷ் குமார் கிணற்றின் மீது நின்று கொண்டு இருந்த கோழி கிணற்றுக்குள் விழாமல் இருப்பதற்காக அதனை துரத்த முயன்ற போது திடீரென கால் தவறி பெரிய கிணற்றில் சந்தோஷ் குமார் விழுந்தார்.
இதனை கண்டதும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் இருங்காட்டுக்கோட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கிக் கிடந்த சந்தோஷ்குமார் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர்
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த சந்தோஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழியை காப்பாற்ற சென்றபோது திடீரென கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சிறுவனின் தந்தைக்கு கை, கால்கள் செயல் இழந்த நிலையில் மகன் இறந்த செய்தி கேட்டதும் ஏதும் செய்ய முடியாமல் மகனின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்த படி கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!