பள்ளி மாணவர்கள் குட்டையில் மூழ்கி பலி... குளிக்கச் சென்ற போது சோகம்!

 
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அனந்தகிரி அமுதன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தரணிஷ் (11) அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (8) 2ஆம் வகுப்பு மாணவர். சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் விளையாடச் சென்றனர். இரவு ஆகிவிட்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலை அடைந்தனர்.

இதையடுத்து, அவிநாசி காவல் நிலையத்தில் சிறுவர்கள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் நம்பியம்பாளையம் அனந்தகிரி குட்டையில் இரண்டு உடல்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்கள் தரணிஷ் மற்றும் ஹரிஹரன் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இரு சிறுவர்களின் உடல்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே பகுதியில் இரு சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்குப்பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!