பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து...10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்!

 
விபத்து

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பவானி போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய மாணவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு, பவானி, குமாரபாளையம் பகுதிகளில்  உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவரும், வேன் உதவியாளரும் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து

விபத்து குறித்து போலீசாரின் விசாரணையில், அந்தியூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளியின் ஒப்பந்த வாகனத்தை கார்த்திக் என்பவரும், அவரின் உதவியாளர் சசிகலா என்பவரும் சேர்ந்து இயக்கி வந்தனர். ஈரோடு பவானி மற்றும் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 18 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பாவனி வழியாக ஈரோடு சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வேன், பவானி - அந்தியூர் பிரிவு சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில்  வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தலை, கழுத்து, கை, கால் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. 

விபத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், விபத்துக்குள்ளான வாகனத்தை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்யும் பணியை மேற்கொண்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web