தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி பள்ளிச் சிறுவன் உயிரிழப்பு!! கதறி துடித்த பெற்றோர்!!

 
சௌடேஸ்வரன்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை விடுமுறையை  ஜாலியாக கொண்டாட வைக்க பார்க், பீச், உறவினர் வீடுகள், மால்கள் என அழைத்து செல்கின்றனர். அதில் சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. தீம்பார்க்கில் தண்ணியில் விளையாடிய மாணவன் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர்  உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 13 வயதில்  சௌடேஸ்வரன் , 11 வயதில்  துவேஸ்வரன்  என 2 மகன்கள் உள்ளனர். 

நீச்சல்

கோடை விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் மல்லூர் அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். குளித்துவிட்டு மேலே வந்த மாணவன் சௌடேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்து விட்டான்.  பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சௌடேஸ்வரனை  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சௌடேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

காவல்நிலையம்
இச்சம்பவம் குறித்து  காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீம் பார்கில் தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தபோது பாதுகாவலர்கள் இருந்தார்களா? பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web