பள்ளி மாணவன் மெட்ரோவில் பாய்ந்து பலி... டீச்சர்ஸ் டார்ச்சர் பண்றாங்க... வெளியான பகீர் உண்மை!

 
மெட்ரோ
 

 

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த 16 வயது மாணவன், நவம்பர் 18-ஆம் தேதி மெட்ரோ நிலையத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன்பு, அதே ரிக்‌ஷாவில் பயணித்த பெண்ணிடம் அவர் அழுதுகொண்டே, “உங்கள் மகனைப் பள்ளியில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்… ஆசிரியர்கள் தாங்க முடியாத அளவில் துன்புறுத்துகிறார்கள்; பெற்றோரை அடிக்கடி அழைக்கிறார்கள்” என்று தனது வலியை பகிர்ந்து கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவத்திற்கு முன் எழுதப்பட்ட தனது கடிதத்திலும், ஆசிரியர்கள் கொடுத்த மன உளைச்சலே காரணம் என மாணவன் குற்றம் சாட்டியிருந்தார். இதனால், பள்ளி முன்பு பெற்றோர்களும் மாணவர்களும்  கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, டெல்லி அரசு விசாரணைக் குழுவை உருவாக்கி நடவடிக்கை தொடங்கியுள்ளது. அதேசமயம், சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளி நான்கு ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மாணவர்களின் மனநலனை கண்காணிக்க அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் என்றும் டெல்லி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!