பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கி கொடூர கொலை!
ராஜஸ்தான், பிடாசர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி பல வாரங்களுக்கு பிறகு கல் குவாரியில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில், அவரது கழுத்தில் தாவணியால் நெரிக்கப்பட்ட தடயங்களும், தலையில் பலத்த காயங்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பெற்றோர் தவறாக ‘வயிற்று உப்புசம்’ என கருதியிருந்தாலும், போலீஸ் விசாரணையில் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

DNA பரிசோதனையில் 40 வயதுடைய சுனில் மேக்வால் கர்ப்பத்திற்குக் காரணம் என்றும், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, சமூக அவமானத்திற்காக கவலையடைந்தார். இதனையடுத்து சிறுமியை கவலைந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, இதனால் சிறுமிகளின் பாதுகாப்பு மீண்டும் பெரும் கேள்விக்குறியாகி சமூகத்தை அதிர வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
