இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் உத்தரவு!

 
விடுமுறை

இன்று மாா்ச் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரில் வீற்றிருக்கும் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நடைபெற உள்ள நிலையில் இந்த திருவிழாவில் உள்ளூர் மக்களும் கலந்துக் கொள்ள வசதியாக இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா

இதற்கான உத்தரவை அறிவித்துள்ள அம்மாவட்ட ஆட்சியா் மு.அருணா, இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மாற்று வேலை நாளாக வரும் மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை முழு நேரம் பணி நாளாக செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை

மார்ச் 15ம் தேதி மாதத்தின் 2வது சனிக்கிழமையாக இருந்த போதிலும் அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.

அதே நேரத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அன்றைய தினம் நடைபெற இருக்கும் தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி திட்டமிட்டபடி வழக்கம்போல நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web