மாா்ச் 10 ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூா் விடுமுறை!

தமிழகத்தில் புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து மாா்ச் 10 ம் தேதி திங்கட்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் மு.அருணா அறிவித்துள்ளாா்.இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மாற்று வேலை நாளாக மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை முழு நேரம் பணி நாளாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாளில் வழக்கம் போல் மாதத்தின் 2வது சனிக்கிழமையாக இருந்த போதிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும். அதே நேரத்தில் மார்ச் 10ம் தேதி நடைபெற இருக்கும் தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி திட்டமிட்டபடி வழக்கம்போல நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!