இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு... ஓசூரில் தேர் திருவிழா!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வரும் மார்ச் 14ம் தேதி முழு வேலைநாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒசூர் தேர்ப்பேட்டை மலைமேல் உள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா நடைபெறுவதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையிலேயே திரண்டுள்ளனர்.

திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவிழா சிறப்பாக நடைபெற அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பக்தர்கள் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
