இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு... குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

 
விடுமுறை

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உ த்தரவிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், இன்று ஜனவரி 2ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் தேரோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறை அவசரக் காலப் பணிகள் மற்றும் வங்கிப் பணிகளுக்குப் பொருந்தாது. முக்கியத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், அவை வழக்கம் போல நடைபெறும்.

கன்னியாகுமரி

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், அதே மாதம் ஜனவரி 10-ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரம்

தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று  நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பெரிய தேர் உட்பட மூன்று தேர்களும் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!