இந்த 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது... உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விழாக்கள் மற்றும் திருவிழாக்களை முன்னிட்டு இரண்டு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 3ம் தேதி திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று காலையில் பரணி தீபமும், மாலையில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால், பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் டிசம்பர் 13ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகச் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பேராலயத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்றைய தினம் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் டிசம்பர் 6ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!