தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்ரல் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

 
விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். 

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் திருநாள் அன்று பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. 

பங்குனி உத்திரம்

நடப்பு ஆண்டு 11.04.2025 அன்று (வெள்ளிக் கிழமை) பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் இந்நன்னாளில் குலதெய்வ வழிபாட்டிற்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு வழங்கக்கோரும் பட்சத்தில் எவ்வித மறுப்புமின்றி விடுப்பு வழங்கிட அனைத்துதுறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 

பங்குனி உத்திரம்

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாளில் தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி/கல்லூரி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தவிர இதர பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு கோரும் பட்சத்தில் எவ்வித மறுப்புமின்றி விடுப்பு வழங்கிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web