தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் பள்ளிகள் திறப்பு... ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் கோடை விடுமுறைக்கு பின்பு நாளை மறுநாள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. பள்ளி கட்டிடங்களின் மேல் தேங்கி உள்ள குப்பைகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.

குடிநீர் தொட்டிகள், வகுப்பறைகள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதே போன்று பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பள்ளிக்கூடம் திறக்கும் நாளில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
