நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

நாளை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் திருவிழா சமயங்களில் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவதுண்டு. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் நாளை மார்ச் 10ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை மார்ச் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!